தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! | ‛மதராஸி' படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக திட்டமிடும் படக்குழு! | கமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பினை தவறவிட்ட நாயகிகள்! | கணவரை பிரிந்து வாழ்கிறாரா ஹன்சிகா? | ‛‛அப்செட் ஆனால் இதை செய்வேன்'': ரகசியம் சொன்ன கீர்த்தி சுரேஷ் | தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” |
நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ‛உப்பு கப்புறம்பு' படம் கடந்த ஓராண்டாக ரிலீசாகாமல் இருந்தது. சமீபத்தில் இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இப்பட அனுபவம் குறித்த பேட்டியளித்த கீர்த்தி சுரேஷ், ‛‛இந்தப் படத்தின் படப்பிடிப்பு வீட்டில் இருப்பது போல் நிதானமாக, பொறுமையாக நடந்தது. படப்பிடிப்பு முடிந்ததும், இன்னும் கொஞ்ச நாட்கள் படப்பிடிப்பு இருந்திருக்கலாம் என வருந்தினேன்.
இந்தத் திரைப்படம் நகைச்சுவையைப் பயன்படுத்தி ஒரு தீவிரமான விஷயத்தை முன்னிலைப்படுத்துகிறது. எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்போம் என்றில்லை. சில நேரங்களில் நான் அப்செட் ஆகிவிடுவேன். அப்படி ஆகிவிட்டால் நன்றாக சாப்பிடுவேன். அதேபோல் காரை எடுத்துக்கொண்டு தனியாக ட்ரைவ் செய்வேன், அப்போது நல்ல மியூசிக் கேட்பேன். அதுமட்டுமின்றி, வீட்டில் ஒரு நாய்க்குட்டி வளர்க்கிறேன். என்ன அப்செட் வந்தாலும் அவன் முகத்தை பார்த்தால் போதும் அவை அனைத்தும் காணாமல் போய்விடும்'' என்றார்.