எக்ஸாம் வெப்சீரிஸ் : சற்குணத்திற்கு துஷாரா தரும் ‛ஆபர்' | சூர்யாவின் கருப்பு பட சிறப்பு காட்சிக்கு தமிழகஅரசு அனுமதி | 'பெத்தி' படம் தெலுங்கு மார்க்கெட்டை பிடித்து தரும்: ஜான்வி கபூர் நம்பிக்கை | மே 14ல் நெட்பிளிக்சில் வெளியாகும் 'துரந்தர்-2' | ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன அட்வைஸ் : இன்றைக்கும் கடைபிடிக்கிறாராம் ஜெய் | விஜய் முதல்வராக பொறுப்பேற்றுள்ளாரே, எப்படி பார்க்கிறீர்கள்? மீடியாக்கள் கேள்விக்கு ரஜினியின் ரியாக்சன்! | ரஜினி, கமலுக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய் | 75 நாளில் 90 கோடி வசூலித்த ராதிகாவின் தாய் கிழவி! | அனில் ரவிபுடி படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : காணாமல் போன நல்லவள் |

நடிகர் பிரித்விராஜ் இரண்டு ஆண்டுகளாகவே ஒரு பக்கம் மோகன்லாலின் ‛எல் 2 : எம்புரான்' படத்தை இயக்குவதிலும், இன்னொரு பக்கம் தெலுங்கில் ‛சலார்', ஹிந்தியில் ‛படே மியான் சோட்டே மியான்' ஆகிய படங்களில் வில்லனாகவும், மாறி மாறி பணியாற்றி வந்தார். அதுமட்டுமல்ல ‛சர்ஜமீன்' என்கிற ஹிந்தி வெப்சீரிசிலும் நடித்துள்ளார். ஜூலை 25 முதல் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது. அடுத்ததாக தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் தற்போது வில்லனாக நடித்தும் வருகிறார் பிரித்விராஜ்.
இன்னொரு பக்கம் மலையாளத்தில் உருவாக இருக்கும் கலிபா என்கிற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் பிரித்விராஜ். இந்த படத்தை புலி முருகன் இயக்குனர் வைசாக் இயக்குகிறார். கடந்த 2010ல் வெளியான போக்கிரி ராஜா என்கிற படத்தில் பிரித்விராஜை இயக்கியதன் மூலம் தான் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமானார் வைசாக். அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து மீண்டும் பிரித்விராஜ் படத்தை இயக்குகிறார். படத்தின் துவக்க விழா பூஜை தற்போது நடைபெற்றுள்ளது. வரும் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் லண்டனில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.




