தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
1950ம் ஆண்டு வெளியான வெற்றிப் படம் 'திகம்பர சாமியார்'. இந்த படம் எம்.என்.நம்பியார் ஹீரோவாக நடித்த படம், அவர் 11 வேடங்களில் நடித்த படம் என்கிற அளவில் மட்டுமே பலருக்குத் தெரியும். ஆனால் இந்த படம்தான் தமிழில் வந்த முதல் உளவியல் திரைப்படம் என்கிறார்கள்.
'ஒருவனை நான்கு நாட்கள் வரை தூங்கவிடாமல் செய்தால் அவன் அடி மனதில் இருக்கும் விஷயங்களை தானாகவே பேசி விடுவான்' என்பது ஒரு உளவியல் கண்டுபிடிப்பு. இதனை அந்த காலத்திலேயே பல ஹாலிவுட் படங்களில் கதை களமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். இதை பயன்படுத்தி தமிழில் வந்த படம்தான் 'திகம்பர சாமியார்'.
வடுவூர் துரைசாமி அய்யங்கார் எழுதிய கதையை அதே பெயரில் தயாரித்து இயக்கினார் மார்டன் தியேட்டர்ஸ் அதிபர் சுந்தரம். இதில் எம்.என்.நம்பியாருடன், எம்.எஸ்.திரவுபதி, லட்சுமி பிரபா, நரசிம்மபாரதி, பாலசுப்பிரமணியம், எம்.ஜி.சக்கரபாணி, டி.ஆர்.ராமச்சந்திரன் உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஜி.ரா.நாயுடு, எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்திருந்தனர்.
இது ஒரு க்ரைம் திரில்லர் படம். குற்றவாளிகளை பல வேடங்கள் போட்டு கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியான நம்பியார். அவர்களை தூங்க விடாமல் செய்து உண்மைகளை பேச வைப்பார் என்பது கதை. இதில் இன்ஸ்பயராகித்தான் விஜய் நடிப்பில் பிரபுதேவா இயக்கிய 'போக்கிரி' படத்தில் பிரகாஷ்ராஜை தூங்கிவிடாமல் செய்து உண்மைகளை பேச வைப்பார்.