நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
நடிகர் சிவகார்த்திகேயன் தனது 25வது படமாக தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதுதவிர ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ‛மதராஸி' என்ற படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இதற்கிடையில் சிவகார்த்திகேயன் அவரின் 24வது படத்தை குறுகிய கால கட்டத்தில் நடிக்கவுள்ளார். இதை குட் நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்க போவதாகவும், பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அப்பா, மகன் உறவை உணர்த்தும் படமாக உருவாகிறது.
இதில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக மலையாள நடிகர் மோகன்லாலை நடிக்க வைக்க பேசி வருகிறார்களாம். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ஆகஸ்ட் மாத இரண்டாம் வாரத்தில் தொடங்க திட்டமிட்டு அதற்கான முன் தயாரிப்பு பணிகளை விரைவுப்படுத்தி உள்ளனர்.