கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
தோழா படத்திற்கு பின் மீண்டும் ஒரு தமிழ் ஹீரோவுடன் டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடித்து இருக்கிறார் பிரபல தெலுங்கு ஹீரோவான நாகர்ஜூனா. தோழாவில் அவர் கார்த்தியுடன் நடித்தார். அந்த படத்தின் கதையும், சீன்களும் இன்றும் பேசப்படுகின்றன. இப்போது குபேராவில் தனுசுடன் இணைந்து நடித்து இருக்கிறார். கஷ்டப்படும் ஒருவன் பணக்காரன் ஆவதே கதை என்று கூறப்படுகிறது. அதனால், சென்னையில் நடந்த குபேரா பட விழாவில் டம்மி நோட்டுகளால் 'ரெட்கார்பேட்' சுற்றுவட்டாரங்கள் டிசைன் செய்யப்பட்டு இருந்தன.
குபேரா மேடையில் பேசிய நாகர்ஜூனா ''தனது சென்னை வாழ்க்கை, கிண்டி கல்லுாரியில் படித்தது உட்பட பல விஷயங்களை மலரும் நினைவுகளாக பகிர்ந்து கொண்டார். அடுத்தும் ஒரு பிரபல தமிழ் ஹீரோ படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் நாகர்ஜூனா, அது ரஜினிகாந்த் நடிக்கும் கூலி.
சென்னையில் வளர்ந்ததால் ஓரளவு நன்றாக தமிழ் பேசுவார் நாகர்ஜூனா. அவர் மூத்த மகன் நாகசைதன்யாவும் தமிழ் பேசுவார். பிரபல தெலுங்கு ஹீரோ நாகேஸ்வரராவ் மகனான நாகர்ஜூனா, கமல் பாணியில் குழந்தை பருவத்தில் இருந்தே நடிக்கிறார். அவரும் நடிக்க வந்து 60 ஆண்டுகளை தாண்டிவிட்டது. அவர் முன்னணி ஹீரோவாக இருந்தாலும் நல்ல கதை என்றால் பந்தா இல்லாமல் தமிழ் ஹீரோக்களுடன் பணிபுரிவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.