பாலிவுட்டுக்கு போன வேகத்திலேயே காதல் கிசுகிசுவில் சிக்கிய ஸ்ரீ லீலா! | ரேஸில் விபத்தில் சிக்கிய அஜித் கார்! | வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! |
இசையமைப்பாளர் இளையராஜா தனது 83வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். சென்னை, தி.நகரில் உள்ள ஸ்டூடியோவிலும், வீட்டிலும் திரளான ரசிகர்கள், சினிமாகாரர்கள், விஐபிகள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தினர். அவருக்கு நேற்று 83வது பிறந்தநாள் என்பதால் பலர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். ஸ்டூடியோ வாசலில் நின்று அவர் பாடல்களை பாடினர். இன்றைக்கு முன்னணி நடிகர்கள் தொடங்கி சின்ன நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், சினிமாகாரர்கள் என அனைவரிடமும் சோஷியல் மீடியா கணக்கு உள்ளது. ஆனால், நேற்றைக்கு பல முன்னணி நடிகர்கள், இளையராஜாவுடன் பணியாற்றவர்கள் , அவர் இசையில் பாடியவர்கள், அவரால் உயர்ந்தவர்கள், பணம் சம்பாதித்தவர்கள் என ஒரு தரப்பினர் அவருக்கு தங்கள் சோஷியல் மீடியாவில் கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை.
தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி சினிமாக்களில் சீனியர்களை கொண்டாடுகிறார்கள். தமிழில் 80 வயதை தொட்ட ஒரு சிலரில் இளையராஜாவும் ஒருவர். ஆனால், அவர் பிறந்தநாளுக்கு டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாவில் கூட பலர் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது இளையராஜாவுக்கு நெருக்கமானர்களின் ஆதங்கமாக இருக்கிறது.