'கூலி' வியாபாரம் இவ்வளவு கோடி நடக்குமா? : சுற்றி வரும் தகவல் | சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? |
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான டூரிஸ்ட் பேமிலி படம் 75 கோடியை தாண்டி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில், இப்பட இயக்குனர் இப்போது அடுத்த பட ஸ்கிரிப்டை உருவாகும் பணியில் தீவிரமாக இருக்கிறார். அடுத்து யாரை வைத்து இயக்கப்போகிறார் என்று விசாரித்தால், தனுசுக்காக கதை தயார் பண்ணுகிறார் என கேள்வி.
போர்த்தொழில், லப்பர் பந்து போன்ற படங்கள் ஹிட்டாக, அந்த பட இயக்குனரை டக்கென அழைத்து பாராட்டி, தனக்காக கதை தயார் பண்ண சொன்னார் தனுஷ். அந்தவகையில் அபிஷனையும் லாக் செய்து இருப்பதாக தகவல். இப்போதைக்கு தனுஷ் கையில் குபேரா, இட்லி கடை, ஹிந்தி படம், இளையராஜா, கலாம் பயோபிக், ராஜ்குமார் பெரிய சாமி படம் உட்பட பல படங்கள் இருக்கிறது. ஆகவே, அபிஷன் கதையில் அடுத்த ஆண்டு நடிப்பார் என தெரிகிறது. ஒருவேளை தனுஷ் கால்ஷீட் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், மீண்டும் சசிகுமாரை வைத்து அபிஷன் படம் இயக்கவும் வாய்ப்பு உள்ளது.