15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி |

பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி தற்போது வளர்ந்து வரும் நடிகையாக மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். அதேபோல மோகன்லாலின் மகன் பிரணவ்வும் இரண்டு வருடத்திற்கு ஒரு படமாவது நடித்துக் கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரும் இணைந்து கூட இரண்டு படங்களில் நடித்துள்ளனர். இவர்கள் இருவரது தந்தைகளும் கிட்டத்தட்ட 40 வருட நண்பர்கள். இருவரும் இணைந்து 35 படங்களுக்கு குறையாமல் பணியாற்றியுள்ளார்கள். அப்படி அவர்கள் கூட்டணியில் உருவான படங்களில் 1991ம் வருடம் வெளியான கிலுக்கம் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பு பெற்ற படங்களில் ஒன்று. மோகன்லால் ரேவதி நடித்திருந்த இந்தப்படத்திண் ரீமேக்கில் நடிக்க வேண்டும் என தனக்கு ஆசை இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் கல்யாணி பிரியதர்ஷன்.
ஆனால், அந்த ரீமேக்கில் ஒரு வித்தியாசம் இருக்க வேண்டுமாம். அதாவது மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் தான் நடிக்க வேண்டும் என்கிறார் கல்யாணி பிரியதர்ஷன். அதேபோல ரேவதி நடித்த கதாபாத்திரத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் நடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் கல்யாணி. பொதுவாக சில படங்களை ரீமேக் செய்யும் போது அண்ணன் கதாபாத்திரத்தை அக்காவாகவும், தங்கை கதாபாத்திரத்தை தம்பியாகவும் மாற்றுவார்கள் ஆனால் கல்யாணியின் ஆசை அப்படியே உல்டாவாக அல்லவா இருக்கிறது.