இளையராஜா படத்தை மிஸ் செய்த கார்த்திக் சுப்பராஜ் | பென்ஸ் படம் பூஜையுடன் துவங்கியது | தோனி குறித்து நெகிழ்ந்த மீனாட்சி சவுத்ரி | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் தண்ணீருக்கடியில் அதிரடி சண்டைக்காட்சி | நம் வீரம் மிகுந்த ராணுவத்தை வணங்குகிறேன் : கமல் | ரஜினி நினைக்கும் விஷயம் | விக்னேஷ்சிவன், நயன்தாரா ஊடலா? | திருநெல்வேலியில் சிம்ரன் பேசியது ஏன்? | விஜய்சேதுபதிக்கு அடுத்த வெற்றி கிடைக்குமா? | நான் பெருமாள் பக்தன், அவரை கிண்டல் செய்யவில்லை : நடிகர் சந்தானம் சரண்டர் |
அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் ஷான் ரோல்டன் இசையமைப்பில், சசிகுமார், சிம்ரன் மற்றும் பலர் நடிப்பில் மே 1ம் தேதி வெளியான படம் 'டூரிஸ்ட் பேமிலி'. இப்படத்தின் பட்ஜெட் சுமார் 15 கோடி என்று சொல்லப்பட்ட நிலையில் கடந்த பத்து நாட்களில் இப்படம் 45 கோடி வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தியேட்டர் வசூல் மட்டுமே.
படத்தின் ஓடிடி, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றின் மூலம் மட்டுமே பட்ஜெட்டில் பாதிக்கும் மேல் தயாரிப்பாளர் வருவாய் பார்த்திருப்பார். படத்தைத் தியேட்டர்களில் திரையிட்ட அனைவருக்குமே லாபம் கிடைத்துள்ளது. இந்த 2025ம் ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் 'மத கஜ ராஜா, குடும்பஸ்தன், டிராகன்' ஆகிய படங்கள் எதிர்பார்க்காத வரவேற்பையும் வசூலையும் பெற்றன. அந்த வரிசையில் தற்போது 'டூரிஸ்ட் பேமிலி'யும் சேர்ந்துள்ளது.
படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்க இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற உள்ளது. அப்போது வசூல் பற்றிய விவரத்தை படக்குழு வெளியிட வாய்ப்புள்ளது. இப்படத்தின் வியாபார வெற்றி யாருக்கு உதவுகிறதோ இல்லையோ, சசிகுமாருக்கு நன்றாக உதவுகிறது. அவர் நடித்து தேங்கிக் கிடந்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.