மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

'கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி, பேரன்பு' என கடந்த 18 வருடங்களில் விமர்சகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட நான்கே படங்களை இயக்கிய ராம் இயக்கத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி, சூரி நடிக்க உருவான படம் 'ஏழு கடல் ஏழு மலை'.
கடந்த வருடம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இப்படத்தின் பிரீமியர் காட்சி நடைபெற்றது. அதற்குப் பின் படத்தைப் பார்க்கப் பலரும் ஆவலாக இருந்தனர். இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இப்படத்தின் டிரைலரையும் வெளியிட்டார்கள். அதற்கடுத்த சில வாரங்களில் படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரையிலும் படத்தின் வெளியீடு குறித்து அறிவிக்காமல் உள்ளார்கள்.
இந்தப் படத்திற்குப் பிறகு ராம் இயக்கத்தில் சிவா, கிரேஸ் ஆண்டனி மற்றும் பலர் நடித்துள்ள 'பறந்து போ' படத்தை இயக்கி முடித்துவிட்டார் ராம். இந்த வருட ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் இப்படத்தின் பிரீமியர் நடைபெற்றது. இப்படத்தின் வெளியீட்டை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். ஜுலை 4ம் தேதி இப்படம் தியேட்டர்களில் வெளியாகிறது. விரைவில் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் வெளியீட்டையும் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.