ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! |

தெலுங்கு நடிகராக இருந்தாலும் நானியின் படங்களுக்கு தமிழிலும் ஓடிடி தளங்களில் நல்ல வரவேற்பு இருக்கும். ராஜமவுலி இயக்கத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்த 'நான் ஈ' படத்திற்கப் பிறகு நானி நடித்த தெலுங்குப் படங்கள் அனைத்துமே தமிழிலும் டப்பிங் ஆகி தியேட்டர்களில் வெளியாகின்றன. ஆனாலும், குறிப்பிடத்தக்க வசூலை அந்தப் படம் பெறுவதில்லை.
பத்திரிகையாளர் சந்திப்பு, யு டியூப் சேனல்கள் பேட்டி என வெளியீட்டிற்கு முன்பு நானி எவ்வளவோ புரமோஷன் செய்கிறார். ஆனால், அவருடைய படங்களுக்கான பத்திரிகையாளர் காட்சி கூட நடக்காமல் போகும். ஆனால், 'ஹிட் 3' படத்திற்கு பத்திரிகையாளர் காட்சி நடந்ததால் விமர்சனங்கள் நிறையவே வந்தன. ஆனால், படத்தில் உள்ள அதிகபட்சமான வன்முறை காட்சிகளால் 'ஏ' சான்றிதழுடன் வெளிந்தது. அதுவே படத்திற்கு இங்கு மைனஸ் ஆக அமைந்தது.
இருந்தாலும் தெலுங்கில் கூட 'சூப்பர் ஹிட்' என்ற பட்டியலில் படம் சேர வாய்ப்பில்லை என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 100 கோடி வசூலைக் கடந்தாலும் படம் அதிக விலைக்கு விற்கப்பட்டதால் குறைவான லாபமே கிடைக்கும் என்கிறார்கள்.