ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
மலையூர் மம்பட்டியான் வெற்றிக்கு பிறகு தியாகராஜன் ஆக்ஷன் ஹீரோவாக மாறினார். அப்போதெல்லாம் இரண்டாம் பாக கலாச்சாரம் இல்லாததால் அதே பாணியில் இன்னொரு படம் உருவாக்க நினைத்தார் தியாகராஜன். அதுதான் 'கொம்பேறி மூக்கன்'. மம்பட்டியான் படத்தில் தியாகராஜன் ஜோடியாக நடித்த சரிதா இதிலும் நடித்தார். அதில் வில்லனாக நடித்த செந்தாமரை இதிலும் வில்லனாக நடித்தார். இவர்கள் தவிர ஊர்வசி, ஜெயந்தி, கவுண்டமணி, தேங்காய் சீனிவாசன் உள்ளிட்ட பலர் நடித்தனர். ஜெகநாதன் இயக்கினார். இளையராஜா இசையமைத்தார்.
மூக்கன் என்ற சிறுவன் தன் பெற்றோருடன் ஒரு கிராமத்தில் வசிக்கிறான். ஆளவந்தார் கிராமத்தில் ஒரு செல்வந்தரும் செல்வாக்கு மிக்கவருமாவார். அவர் ஒரு பெண் பித்தர். ஒரு இரவு, அவன் மூக்கனின் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து அவனது தாயை பாலியல் பலாத்காரம் செய்து, அவனது அடியாட்களின் உதவியுடன் அவனது தந்தையைக் கொன்று எரிக்கிறான்.
அவனது தாய் ஆரம்பத்தில் தற்கொலைக்கு முயற்சிக்கிறாள், ஆனால் சிறுவனைப் பார்த்ததும் தன் மனதை மாற்றிக் கொள்கிறாள், ஆளவந்தார் செய்த அநீதிக்குப் பழிவாங்க மகனை வீரனாக வளர்க்கிறார். அவன் தலையில் ஒரு கொண்டை போட்டு, வில்லனை பழிவாங்குகிற வரையில் அந்த கொண்டயை அவிழ்க்க கூடாது என்று நிபந்தனை விதிக்கிறாள். வளர்ந்து ஆளாகும் மூக்கன் எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் கதை.
இந்த படம் மலையூர் மம்பட்டியான் அளவிற்கு வெற்றி பெறாவிட்டாலும், தயாரிப்பாளருக்கு லாபம் தந்த படம். தெலுங்கில் 'கால ருத்ரடு' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.