ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

பாலிவுட் பாடகர் அபிஜித் பட்டாச்சார்யா அளித்த பேட்டி ஒன்றில் "ஏ.ஆர்.ரஹ்மான் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துவதன் மூலம் பாரம்பரிய இசை கலைஞர்கள் வேலை இழந்து வருகிறார்கள்" என்று கூறியிருந்தார்.
இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் அளித்துள்ள பதிலில் "அபிஜித்தை நான் பெரிதும் மதிக்கிறேன். இது அவரது தனிப்பட்ட கருத்து என்று நினைக்கிறேன். துபாயில் 60 இசைக்கலைஞர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கியுள்ளேன். அதிலுள்ள அனைவருக்கும் மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படுகிறது. மருத்துவக் காப்பீடு வசதி செய்து தரப்படுகிறது.
நான் இசை அமைத்த 'பொன்னியின் செல்வன்', 'சாவ்வா' ஆகிய படங்களில் 200 முதல் 300 இசைக்கலைஞர்கள் வரை பணியாற்றியுள்ளனர். சில நேரங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் 100க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் இணைந்து பணியாற்றுவார்கள். அது பாடலின் தேவையை பொறுத்து அமையும். இதுபற்றி நான் எந்தவொரு போட்டோவும் வெளியிட்டதில்லை என்பதால், இதுபற்றி பலருக்கு தெரியவில்லை.
நான் எந்தளவுக்கு லைவ் இசைக்கலைஞர்களை பயன்படுத்துகிறேன் என்று, இதுவரை நான் பணியாற்றிய படங்களின் தயாரிப்பாளர்களிடம் கேட்டு பாருங்கள்" என்று கூறியுள்ளார்.