64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! | பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் | 10 கோடிக்கு கார் வாங்கிய அட்லி | பிளாஷ்பேக்: தமிழில் ரீமேக் ஆன சார்லி சாப்ளின் படம் | பிளாஷ்பேக்: சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கிய “ஆராய்ச்சி மணி” |

நடிகர் தியாகராஜன் தயாரிப்பு, இயக்கத்தில் அவர் மகன் பிரசாந்த், மீரா ஜாஸ்மின் நடிப்பில், 2011ல் வெளியான படம் மம்பட்டியான். அந்த படத்தில் தமன் இசையில், நா.முத்துக்குமார் வரிகளில் இடம் பெற்ற மலையுரு நாட்டாமை , மனச காட்டு பூட்டாம உன்ன போல யாரும் இல்ல மாமா .என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. இன்றைக்கும் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் திருமண வீடுகளில் இந்த பாடல் ஒலிபரப்பப்படுகிறது. மணமகன், மணமகள் இந்த பாடலுக்கு உற்சாகமாக ஆடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள்.
சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற டூரிஸ்ட் பேமிலி படத்திலும் இந்த பாடல் முக்கியமான காட்சியில் இடம் பெறுகிறது. அந்த படத்தில் பயன்படுத்த முறைப்படி படக்குழு அனுமதி பெற்றதா? அப்படி அனுமதி வாங்காத பட்சத்தில் நீங்க நோட்டீஸ் அனுப்பினீர்களா என்று நடிகர் தியாகராஜனிடம் கேட்டபோது ''அந்த பாடல் ஹிட்டானது சந்தோஷம். இன்றும் உலக நாடுகளில் அந்த பாடல் ஒலித்துக் கொண்டே இருப்பது இன்னும் சந்தோஷம். டூரிஸ்ட் பேமிலி படத்தில் இடம் பெற்றது கூடுதல் சந்தோஷம். என்னிடம் யாரும் முறைப்படி அந்த பாடலை பயன்படுத்த அனுமதி வாங்கவில்லை.
டூரிஸ்ட் பேமிலி ஹிட்டான பின்னரும் கூட யாரும் நன்றி தெரிவிக்கவில்லை. ஆனாலும், என் பாடல் இப்போது வந்திருக்கும் படத்திலும் ஒலித்து இருப்பதை விட வேறு என்ன வேண்டும். திருமண வீடு, விசேஷ வீடுகளில் பலர் என் பாடலை மகிழ்ச்சிக்காக பயன்படுகிறார்கள். அதை பார்த்து நானும் மகிழ்கிறேன். அதை தொடர்ச்சியாக தங்கள் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்தி பாடலை உயிர்ப்போடு வைத்து இருப்பவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அது தொடரட்டும்.
யாருக்கும் நோட்டீஸ் அனுப்பமாட்டேன். தமன் இசையமைத்த அந்த பாடலை நா.முத்துக்குமார் எழுதியிருந்தாலும், முதல் சில வரிகளை நான்தான் எழுதினேன். குழந்தை வளர்ந்து வெற்றி பெற்றால் பெற்றோர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ, அதேபோல் அந்த பாடல் பிரபலமாவதால் எனக்கு மகிழ்ச்சி' என்று சிரிக்கிறார் நடிகர் தியாகராஜன்.