மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? | சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு |
அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‛குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா இசையமைத்த ‛ஒத்த ரூவாய் தாரேன்', 'இளமை இதோ இதோ', 'என் ஜோடி மஞ்ச குருவி' ஆகிய பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இந்த பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா, பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இது தொடர்பாக தயாரிப்பாளர் ரவி சங்கர் அளித்த விளக்கம்: அந்த பாடல்களைப் பயன்படுத்துவதற்கான அனைத்து நடைமுறைகளையும் நாங்கள் பின்பற்றியுள்ளோம். தொடர்புடைய இசை நிறுவனங்களிடம் முறையாக அனுமதி பெற்றுள்ளோம். அவர்களுக்குப் பணம் கொடுத்திருக்கிறோம். தடையில்லா சான்றும் பெற்றுள்ளோம். இளையராஜாவிடம் இருந்து எங்களுக்கு எந்த நோட்டீஸும் இதுவரை வரவில்லை. அவர் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. நோட்டீஸ் கிடைத்ததும் எங்கள் சட்டக்குழு அதை சந்திக்கும். இவ்வாறு அவர் விளக்கமளித்துள்ளார்.