ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
கன்னட திரை உலகின் பிரபல நடிகரான தர்ஷன் கடந்த வருடம் ஜூன் மாதம் தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடா என்பவருக்கு இந்த ரேணுகா சுவாமி தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி டார்ச்சர் செய்த கோபத்தில் இவர் இந்த குற்றச்செயலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து பல முறை அவர் ஜாமினுக்கு விண்ணப்பித்து மறுக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் தர்ஷனுக்கு மட்டுமல்ல, அவரது காதலி பவித்ரா கவுடா மற்றும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஜாமின் வழங்கப்பட்டது.
அதே சமயம் இந்த வழக்கு சம்பந்தமான விசாரணைக்கு அழைக்கும்போது தவறாமல் வந்து ஆஜராக வேண்டும் என உத்தரவும் இடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் நீதிமன்றத்திற்கு செல்வதை தவிர்த்து விட்டு அன்றைய தினம் கன்னடத்தில் உருவாகியுள்ள வாமனா என்கிற படத்தில் சிறப்பு பிரிவியூ காட்சி திரையிடலில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார்.
அவர் இந்த படத்தை பார்த்துவிட்டு திரையரங்கில் இருந்து வெளியே வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகின. பல ரசிகர்கள் அவர் கெத்தாக நடந்து செல்வதை பார்த்துவிட்டு, சில மாதங்களுக்கு முன்பு அதீத முதுகு வலியால் பாதிக்கப்பட்டு ஆபரேஷன் செய்ய வேண்டும், அதனால் எனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து நீதிமன்றத்தில் ஜாமின் கோரி வழக்கு தொடர்ந்த நடிகர் தர்ஷனா இப்படி கெத்தாக நடந்து செல்கிறார் என்று தங்களது ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.