டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

பிரித்விராஜ் டைரக்ஷனில் மோகன்லால் நடிப்பில் சமீபத்தில் ‛எம்புரான்' திரைப்படம் வெளியானது. ‛லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமாக வெளியான இந்த படம் சில சர்ச்சைகளை சந்தித்தாலும் முதலுக்கு மோசம் இல்லாமல் ஓரளவு நல்ல வசூலையே பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்ததாக மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‛தொடரும்' திரைப்படம் வரும் ஏப்ரல் 25ம் தேதி வெளியாக இருக்கிறது. இயக்குனர் தருண் மூர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு நடிகை ஷோபனா மீண்டும் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இதில் மோகன்லால் கண்ணாடியை பார்த்து தனது தாடியை ட்ரிம் பண்ணிக் கொள்வது போன்ற காட்சியும் அதற்கு ஷோபனா தாடியை எடுக்கக் கூடாது என்று சொல்வது போன்று வசனம் இடம் பெற்றுள்ளது. அதற்கு மோகன்லால் என் தாடியில் உங்களுக்கு எல்லாம் என்ன பிரச்சனை என்று கொஞ்சம் நக்கலும் கோபமுமாக கேட்பது போல ஒரு வசனமும் இடம் பெற்றுள்ளது.
பொதுவாகவே மோகன்லால் பல நேரங்களில் வெளியே நிகழ்ச்சிகளில் தாடியுடன் கலந்து கொண்டு வருகிறார். சில படங்களிலும் கூட அவர் தாடி வைத்த கெட்டப்பில் சில கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனால் சினிமா ரசிகர்கள் அவர் தாடி வைத்திருக்கும் தோற்றத்தை விமர்சித்து கிண்டலடிக்கும் விதமாக அவ்வப்போது கமெண்ட்டுகள் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இந்த வசனத்தை இந்த டீசரில் சேர்த்து உள்ளார்கள் என்று தெரிகிறது.