'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழில் 'சித்திரம் பேசுதடி, தீபாவளி' உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்தவர் நடிகை பாவனா. மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் மலையாளத்தில் அறிமுகமான சமயத்தில் குஞ்சாக்கோ போபன், ஜெயசூர்யா, பிரித்விராஜ் உள்ளிட்ட இளம் நடிகர்களுடன் தொடர்ந்து நடித்தார். அதில் குஞ்சாக்கோ போபன், பாவனா ஜோடி ரசிகர்களின் பேவரைட் ஜோடியாக மாறியது. இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து எதிர்பாராத விதமாக தங்களது பயணத்திற்காக வந்த இடத்தில் விமான நிலையத்தில் இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டுள்ளனர்.
இது குறித்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள குஞ்சாக்கோ போபன் கூறும்போது, “நான் என்னுடன் நடித்த முதல் படத்திலிருந்து ஒரு பப்ளி பெண்ணாக பார்த்து வந்த நடிகை பாவனாவுடன் எதிர்பாராத விதமான ஒரு சந்திப்பு இது. வாழ்க்கையில் ஏற்பட்ட மேடு பள்ளங்களையும் பிரச்னைகளையும் தைரியமாக எதிர்கொண்டு வரும் அவரைப் பார்க்கும்போது இதயம் நெகிழ்ந்தது” என்று கூறியுள்ளார். குஞ்சாக்கோ போபனும் பாவனாவும் 'சொப்பனக்கூடு, ஹிருதயத்தில் சூக்ஷிக்கான், டாக்டர் லவ்' உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.