மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல மாணவர்களுக்கு மிகப்பெரிய அளவில் காயம் ஏற்பட்டது. அந்த பள்ளியில் நடிகரும் ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாண் மகன் மார்க் சங்கரும் படித்து வந்தார். இந்த தகவல் கேள்விப்பட்டதும் உடனடியாக பவன் கல்யாண், தனது சகோதரர் சிரஞ்சீவி மற்றும் குடும்பத்தினருடன் சிங்கப்பூர் விரைந்து சென்று ஓரளவு காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த தனது மகனை ஹைதராபாத்திற்கு அழைத்து வந்தனர்.
தீ விபத்து என்றாலும் மகன் கடவுள் அருளால் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதை தொடர்ந்து பவன் கல்யானின் மனைவி அன்னா லெஷ்னேவா சமீபத்தில் திருப்பதி சென்று முடி காணிக்கை செலுத்தியுள்ளார். அது மட்டுமல்ல அன்றைய தினம் பக்தர்களுக்கான 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான அன்னதான செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும் அன்னதானத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தன் கையாலேயே உணவு பரிமாறி தன் வேண்டுதலை நிறைவேற்றினார் பவன் கல்யாணின் மனைவி. இது அங்கே வந்திருந்த பக்தர்களை நெகிழ வைத்தது.