மிரட்டும் ‛காந்தாரா சாப்டர் 1' டிரைலர் | புதியவர் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் | சண்டைக் காட்சியில் நடித்த போது விபத்து! ஸ்பைடர்மேன் டாம் ஹாலண்ட் மருத்துவமனையில் அனுமதி! | ரஜினியின் ‛மனிதன்' அக்டோபர் 10ம் தேதி ரீ ரிலீஸ் | பெரிய ஹீரோகளின் புதுப்படங்கள் வரல : பழைய படங்கள் ரீ ரிலீஸ் | போலீஸ் ஸ்டேஷனுக்கு பிரச்னை : சம்பளத்தை குறைத்து வாங்கிய நட்டி | தனுஷ் மனதில் மாற்றம் ஏன் : ஊர், ஊராக சுற்றுவது ஏன் | எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன் செய்த உதவி : மூத்த நடி எம்.என்.ராஜம் நெகிழ்ச்சி | திரிஷ்யம் 3: பூஜையுடன் ஆரம்பம் | மோகன்லாலுக்கு மம்முட்டி, சிரஞ்சீவி வாழ்த்து |
கடந்த வருடம் கேரளாவில் வெளியான ஹேமா கமிஷன் அறிக்கை மலையாளத் திரையுலகில் பெண்கள் வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை உறுதி செய்தது மட்டுமல்லாமல் போதைப் பொருள் கலாச்சாரமும் இருக்கிறது என்பதையும் குறிப்பிட்டிருந்தது. சமீபத்தில் கோழிக்கோடு பகுதியில் கைது செய்யப்பட்ட இருவரில் பெண் ஒருவர் கொடுத்த வாக்குமூலத்தில் பிரபல நடிகர்களான ஷைன் டாம் சாக்கோ மற்றும் ஸ்ரீநாத் பாஷி ஆகியோருக்கு நாங்கள் தொடர்ந்து போதைப்பொருள் சப்ளை செய்தோம் என குறிப்பிட்டது அதை இன்னும் உறுதி செய்வதாக அமைந்தது.
இந்த நிலையில் இளம் நடிகை வின்சி அலோசியஸ் என்பவர் இதை இன்னும் உறுதிப்படுத்தும் விதமாக தனது படங்களில் போதை மருந்து பயன்படுத்திய நடிகரால் தனக்கு ஏற்பட்டு அனுபவம் குறித்து அது அதிர்ச்சிகரமான தகவலை வெளிப்படுத்தி உள்ளார். இவர் மலையாளத்தில் விக்ருதி, ஜன கன மன, சவுதி வெள்ளக்கா உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமானவர். 2023ல் வெளியான ரேகா என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கேரளா அரசு விருது மற்றும் பிலிம்பேர் விருது இரண்டையும் பெற்றவர்.
இது குறித்து அவர் கூறும்போது, “சம்பந்தப்பட்ட நடிகரின் பெயரை குறிப்பிடாமல், “நான் ஒரு படத்தில் பணியாற்றியபோது அந்த படத்தில் முக்கிய நடிகராக நடித்தவர் போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தார். ஒரு முறை நான் அணிந்திருந்த ஆடையில் ஒரு சிறிய பிரச்சனை என்பதால் அதை சரி செய்வதற்காக ஒரு தனி அறைக்கு செல்ல முற்பட்டேன். அப்போது நானும் கூடவே வந்து உதவி செய்கிறேன் என என்னுடன் வர முற்பட்டார்.
அது மட்டுமல்ல இன்னொரு நாள் ஒரு பாடல் காட்சிக்கான ரிகர்சலின் போது திடீரென அவரது உதட்டில் இருந்து வெள்ளையான நிறம் கொண்ட பொருள் வெளிப்பட்டது. அப்போதே எனக்கு அவர் போதை பொருள் பயன்படுத்தி இருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. அதனால் இனிமேல் போதை பொருள் பயன்படுத்துபவர்களுடன் நடிப்பதில்லை என்பதை ஒரு கொள்கை முடிவாகவே எடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார் வின்சி அலோசியஸ்.