‛ஐ யம் கேம்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது | மற்றுமொரு வெற்றி, கடவுளுக்கு நன்றி சொன்ன திரிஷா | ‛திரிஷ்யம் 3' - முதல் காட்சியிலேயே தவித்த ரசிகர்கள் | ஆகஸ்ட் மாதம் துவங்கும் மணிரத்னம், விஜய் சேதுபதி படம் | திகில் முதல் காமெடி வரை.... வரிசைக் கட்டும் ஓடிடி ரிலீஸ்...! | ‛ஏழு கடல் ஏழு மலை' படத்தில் ஏ.ஐ தொழில்நுட்பம் | அர்ஜுன் தாஸின் ‛கான் சிட்டி' ரிலீஸ் தேதி இதோ | ராமாயணா படத்தில் சாய் பல்லவி குரலை வேண்டாம் என்ற இயக்குனர் | ‛ஜனநாயகன்' பட நிறுவன தயாரிப்பில் சூர்யா | விஜய் ஒரு சுனாமி.. அவர் ஜெயிப்பார் என தெரியும்: மிஷ்கின் |

கலாபவன் கிரியேஷன் சார்பில் ஜி.வி.எஸ்.ராஜு தயாரித்துள்ள படம் 'நாங்கள்'. புதுமுகங்கள் மிதுன் வி, ரித்திக், நிதின், அப்துல் ரபே மற்றும் பிரார்த்தனா நடித்துள்ளனர். வேத் ஷங்கர் சுகவனம் இசை அமைத்துள்ளார். அவினாஷ் பிரகாஷ், ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ளார்.
படம் பற்றி அவர் கூறும்போது, ''இது குழந்தைகள் பற்றிய படம். கண்டிப்பான தந்தையின் வளர்ப்பில் இருக்கும் 3 மகன்கள், வாழ்க்கையை எப்படி கற்றுக் கொள்கிறார்கள் என்பது கதை. உளவியல் ரீதியான பிரச்னைகளையும் இந்தப் படம் பேசும். சீரியஸான கதை என்றாலும் எல்லோரும் ரசிக்கும்படி இருக்கும். மிதுன், ரித்திக், நிதின் ஆகியோர் குழந்தைகளாக நடித்துள்ளனர். ரோட்டர்டாம், மோஸ்ட்ரா சாஓ பாவ்லோ, ஜியோ மாமி உட்பட பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்ற படத்தை வருகிற 18ம் தேதி தியேட்டர்களில் வெளியிடுகிறோம்.




