மஞ்சு மனோஜுக்குத் திருப்பம் தந்த 'மிராய்' | தாய்மை அடைந்த கத்ரினா கைப்: அடுத்த மாதம் 'டெலிவரி' | 'லோகா' வெற்றி: இயக்குனர் ஜீத்து ஜோசப் எச்சரிக்கை | ஓடிடி : முதலித்தில் 'சாயரா', இரண்டாமிடத்தில் 'கூலி' | பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை |
சிங்கப்பூர் பள்ளியில் படித்து வரும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கினார்.
நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வராகவும் இருப்பவர் பவன் கல்யாண். இவரின் இளைய மகன் மார்க் சங்கர். இவர் சிங்கப்பூரில் உள்ள பிரபல பள்ளியில் படித்து வருகிறார். இந்த பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மார்க் சங்கர் காயம் அடைந்தார். அவருக்கு கைகள், கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தின் போது எழுந்த புகையை சுவாசித்ததால் அவருக்கு சுவாசக்கோளாறும் ஏற்பட்டு இருக்கிறது.
இதையடுத்து, அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் காயம் அடைந்துள்ளதை ஜன சேனா கட்சி தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
மகனுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ள விவரம் அல்லூர் சீதாராம ராஜூ மாவட்டத்தில் உள்ள பவன் கல்யாணுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மேற்கொண்டுள்ள அரசு பயணத்தை நிறுத்திவிட்டு, உடனடியாக அவர் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்று அரசு உயரதிகாரிகளும், கட்சியின் முன்னணி தலைவர்களும் பவன் கல்யாணை கேட்டுக் கொண்டுள்ளனர். இதையடுத்து, அவர் உடனடியாக சிங்கப்பூர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.