பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

கடந்த மாதத்தில் திரைக்கு வந்த ‛மர்மர்' என்ற ஹாரர் படத்தில் நாயகனாக நடித்தவர் தேவ்ராஜ். இந்த படத்துக்கு பிறகு இரண்டு புதிய படங்களில் கமிட்டாகி இருப்பதாக கூறும் தேவ்ராஜ், இந்த இரண்டு படங்களிலுமே ரொமான்டிக் கலந்த காமெடி கதைகளில் நடிக்கப் போவதாக கூறுகிறார். மேலும், ‛‛தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், சத்யராஜ் என அனைவருமே என்னை வெகுவாக கவர்ந்த நடிகர்கள்தான். இவர்களில் சத்யராஜை நான் பெரிய அளவில் ரசித்துள்ளேன். குறிப்பாக நெகட்டீவ் கலந்த ஹீரோவாக அவர் நடித்த படங்களை விரும்பி பார்ப்பேன். அதன் காரணமாகவே மலேசிய தமிழில் உருவான ‛தனுஷ்' என்ற ஒரு படத்தில் வில்லனாக நடித்தேன்.
அந்த வகையில் சினிமாவை பொறுத்தவரை சத்யராஜ்தான் என்னுடைய ரோல் மாடலாக இருக்கிறார். அதனால் எதிர்காலத்தில் நெகட்டீவ் கலந்த ஹீரோ கதைகளை அதிகமாக தேர்வு செய்து நடிப்பேன். அதோடு வில்லேஜ் கதைகளில் நடிப்பதிலும் எனக்கு அதிக ஆர்வம் உள்ளது'' என்று கூறும் தேவ்ராஜ், ‛‛சத்யராஜ் என்னை கவர்ந்த நடிகர் என்றாலும் நடிப்பில் அவரது பாணியை பின்பற்றாமல் எனக்கென்று ஒரு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்துவேன். எனது தனித்திறமையை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தரமான இடத்தை பிடிப்பேன். தற்போது மர்மர் படத்தில் எனது நடிப்புக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளது.
படத்தை பார்த்த ரசிகர்கள் என்னை தொடர்பு கொண்டு பாராட்டியது உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அதனால் அடுத்து நடிக்க போகும் புதிய படங்களில் இன்னும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நிரந்தர இடத்தை பிடிப்பேன். ஏற்கனவே சில படங்கள், சீரியல்களில் சிறிய வேடங்களில் நடித்திருக்கிறேன். என்றாலும் இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன்'' என்கிறார்.




