2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! | இரண்டாவது முறையாக பாலிவுட் இளம் நடிகருடன் இணையும் ராஷ்மிகா! |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதுநாள் வரை படம் குறித்து சின்ன தகவல்கள் கூட கசியாமல் பார்த்துக் கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தற்போது இந்த படம் பற்றி கொஞ்சம் வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளார். குறிப்பாக இந்த படத்தில் நாகார்ஜுனா, அமீர்கான், உபேந்திரா என மற்ற மொழி திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் முதன்முறையாக ரஜினியுடன் இணைந்து நடித்தாலும் கூட. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சத்யராஜ் ரஜினியுடன் இணைந்து நடிப்பது தான் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
இடையில் சிவாஜி படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க சத்யராஜை அழைத்தபோது அவர் மறுத்து விட்டதுடன், அடுத்தடுத்த பல நிகழ்வுகளில் ரஜினி குறித்து விமர்சிக்கும் விதமாகத்தான் பேசினார். அப்படிப்பட்டவர் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து நடித்தார் என்றால் அது லோகேஷ் கனகராஜின் கதை மற்றும் சத்யராஜின் கதாபாத்திரம் தான் காரணம். அதேசமயம் இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்த ஒரு காட்சியை சத்யராஜிடம் போட்டுக் காட்டியுள்ளார் லோகேஷ் கனகராஜ். அதை பார்த்த சத்யராஜ், “சிலர் ஹீரோக்களாக நடிப்பார்கள். ஆனால் உண்மையிலேயே நிஜ வாழ்வில் ஒருவர் ஹீரோவாக இருக்க முடியும் என்றால் அது ரஜினி தான்” என்று பாராட்டினாராம் சத்யராஜ். இந்த தகவலையும் தனது பேட்டியில் லோகேஷ் கனகராஜே கூறியுள்ளார்.




