கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை பல வருடங்களாக தொகுத்து வழங்கி, சமீப வருடங்களாக அதன் நடுவராகவும் பொறுப்பு வைத்து வருபவர் ஈரோடு மகேஷ். காமெடி தொகுப்பாளர் என்று அறியப்பட்டாலும் பல கல்லூரிகளில் மாணவர்களை தன்னம்பிக்கை பேச்சால் தொடர்ந்து உற்சாகப்படுத்தி வரும் பணியையும் செய்து வருகிறார். சிவகார்த்திகேயன், ஈரோடு மகேஷ் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் ஒரே நிகழ்ச்சியில் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர்கள் தான். டிவி நிகழ்ச்சியை தாண்டி 2012ல் சட்டம் ஒரு இருட்டறை படத்தின் மூலம் நடிகராகவும் மாறிய ஈரோடு மகேஷ், சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது சூரி நடிப்பில் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நாளை (மே-16) வெளியாக இருக்கும் மாமன் படத்தின் மூலம் வசனகர்த்தாவாகவும் புரமோஷன் பெற்றுள்ளார். ஆம்.. இந்த படத்தின் இயக்குனருடன் இணைந்து படத்திற்கான நகைச்சுவை வசனங்களை ஈரோடு மகேஷ் தான் எழுதியுள்ளார். சமீபத்தில் திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூரி இந்த தகவலை வெளியிட்டார்.