கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

கடந்த 2021ல் வெளியான 'டெடி, சார்பட்டா பரம்பரை, அரண்மனை-3' என மூன்று படங்கள் ஆர்யாவுக்கு வெற்றி படங்களாக அமைந்தன. அதிலும் குறிப்பாக பா.ரஞ்சித் இயக்கத்தில் எண்பதுகளில் நடக்கும் கதையம்சத்துடன் வெளியான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து ஆர்யா நடித்த படங்கள் எதுவும் அந்த அளவுக்கு அவருக்கு கை கொடுக்கவில்லை. அதேபோல இயக்குனர் பா.ரஞ்சித், 'நட்சத்திரங்கள் நகர்கிறது, தங்கலான்' என இரண்டு படங்களை இயக்கி விட்டார். தங்கலான் படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டாலும் பெரிய வரவேற்பு பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த நிலையில் தான் சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என ஏற்கனவே பா.ரஞ்சித்தும் ஆர்யாவும் கூறி வந்தனர். தற்போது சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'டிடி நெஸ்ட் லெவல்' படத்தை தயாரித்துள்ளார் ஆர்யா, விரைவில் வெளியாக உள்ள இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது அவர் சார்பட்டா பரம்பரை 2 படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. அதற்கு முன்பாக தற்போது 'வேட்டுவன்' என்கிற படத்தில் நடித்து வருகிறேன். இந்த படப்பிடிப்பு முடிவடைந்ததும் சார்பட்டா பரம்பரை 2 துவங்கும்” என்று கூறியுள்ளார்.




