கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? |
1976ம் ஆண்டு இதேநாளில் வெளிவந்த 'அன்னக்கிளி' தனது 49 வருடத்தை முடித்து இன்று முதல் பொன்விழாவில் அடி எடுத்து வைக்கிறது. தமிழ் சினிமாவின் மைல்கல்லை உருவாக்கிய தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம், கதை, திரைக்கதை, வசனம் எழுதிய செல்வராஜ், இசை சாம்ராஜ்யத்தை ஆரம்பித்த இளையராஜா ஆகியோருக்கு முதலில் வாழ்த்துக்கள்.
தான் நேசித்தவனுக்காக உயிரையே கொடுத்த ஒரு பெண்ணின் எளிய கதை தான் அன்னக்கிளி. அதை கிராமிய பின்னணியில் உருவாக்கி இருந்தார்கள் இயக்குனர்கள் தேவராஜ் - மோகன். ஹிந்தி பாடல்கள் கலக்கி கொண்டிருந்த காலத்தில் தமிழ் பாடல்களுக்கு குறிப்பாக, கிராமத்து இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்த பஞ்சு அருணாசலத்திற்கு அமைந்தார் ராசையா.
தி.நகரின் பேரூந்து நிலைய அருகிலுள்ள 'கிளப் ஹவுஸ்' ஓட்டலில் பஞ்சு அருணாசலத்தைச் சந்திக்க ராசய்யாவும், அவர் அண்ணன் பாஸ்கரும், வசனகர்த்தா செல்வராஜால் அழைத்து வரப்படுகிறார்கள். பஞ்சு அருணாசலத்தைச் சுற்றியுள்ளவர்களோ புதியவர்களை ஏற்கக் கூடாது எனத் தூபம் போடுகிறார்கள். 'மருத்துவச்சி', 'சூடிக் கொடுத்தாள்' போன்ற தலைப்புகளே படத்திற்காகத் தேர்வு செய்யப்பட்டிருந்த நிலையில், ராசய்யா தன் ஹார்மோனியத்தில் 'அன்னக்கிளி உன்னைத் தேடுதே' என்று இசைக்க, அதையே தலைப்பாக்கினார் பஞ்சு. திறமைக்கு மதிப்பளித்து, ராசய்யாவை இளையராஜாவாக்கினார்.
சுஜாதா, சிவக்குமார், 'படாபட்' ஜெயலட்சுமி, ஸ்ரீகாந்த், 'தேங்கை' சீனிவாசன், எஸ்.வி.சுப்பையா, எஸ்.என்.லட்சுமி, மணிமாலா, 'வெண்ணிராடை' மூர்த்தி, ஆகியோர் நடித்தார்கள்.
எஸ்.பி. தமிழரசி தனது எஸ்.பி.டி பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்தார், கதை எழுதியவர் ஆர்.செல்வராஜ். திரைக்கதை, வசனம் மற்றும் பாடல் வரிகளை பஞ்சு அருணாச்சலம் எழுதினார். ஏ. சோமசுந்தரம் ஒளிப்பதிவு செய்தார். படத்தின் பெரும்பகுதியை உண்மையான கிராமப்புற இடங்களில் படமாக்கினார், கருப்பு வெள்ளையிலேயே வண்ணங்களை உருவாக்கினார்.
மாநில மொழிப்படத்திற்கான தேசிய விருது பெற்ற இப்படம், திரையிடப்பட்ட உடனேயே பெரும் வெற்றி வரவில்லை. அப்போது தமிழகம் முழுவதும் ஒலித்த இளையராஜாவின் பாடல்கள் மக்களை தியேட்டருக்கு எடுத்து வந்து அமர்த்தியது. பொன்விழா ஆண்டிற்கு வந்திருக்கும் அன்னக்கிளி அப்போது வெள்ளி விழா கொண்டாடினாள்.
அதேப்போல் அன்னக்கிளி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜாவிற்கும் இது பொன்விழா ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.