‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் கூலி படம் இன்றைய தினம் திரைக்கு வந்துள்ள நிலையில் இப்படம் திரையிடப்பட்டுள்ள அனைத்து தியேட்டர் வளாகங்களிலும் ரஜினி ரசிகர்கள் பாலபிஷேகம் மற்றும் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். குறிப்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி தியேட்டரில் ரஜினி ரசிகர்கள் மிகப் பெரிய அளவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் காட்சியை பார்ப்பதற்கு பல சினிமா பிரபலங்களும் தியேட்டர்களுக்கு வருகை தந்தார்கள். குறிப்பாக அனைவரும் எதிர்பார்த்தபடியே ரோகிணி தியேட்டருக்கு நடிகர் தனுஷ், கூலி படம் பார்க்க வந்திருந்தார். அவரைத் தொடர்ந்து ரஜினியின் குடும்பத்தார் வந்தனர். ரஜினியின் மனைவி லதா ரஜினி, மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி, பேரன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோரும் ரோகிணி தியேட்டருக்கு வந்திருந்தார்கள். அதேபோல் சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டரில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அனிருத், ஸ்ருதிஹாசன் ஆகியோர் கூலி படம் பார்த்துள்ளார்கள். அதேப்போல் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி உடன் கூலி படத்தை பார்த்தார்.