செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் ‛குட் பேட் அக்லி'. இந்த படம் வருகிற 10ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது இப்படத்தின் முன்பதிவுக்கான டிக்கெட்டுகள் விறுவிறுப்பாக பதிவாகி வருகிறது. மேலும், தமிழகத்தில் அதிகாலை 4 மணி மற்றும் காலை 7.30 மணி காட்சிகள் திரையிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிடப்பட்டு வருகிறது.
அதேசமயம் அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா போன்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டு வருகிறது. ஆனால் இதுபோன்று அண்டை மாநிலங்களில் முன்கூட்டியே காட்சிகள் திரையிடப்பட்டால், ஒருவேளை தமிழகத்தில் படம் திரையிடுவதற்கு முன்பே சோசியல் மீடியாவில் யாரேனும் நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பி விட்டால், அது படத்தின் வசூலை பாதிக்கும். அதன் காரணமாகவே தமிழகத்தில் குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ம் தேதி காலை 9 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட இருப்பதால், இதே காலை 9 மணிக்குதான் மற்ற அண்டை மாநிலங்களிலும் முதல் காட்சியை திரையிடுவதற்கு அப்படத்தை தயாரித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.