மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? |
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்படும் ஒரு நிகழ்வு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள். 18வது ஆண்டாக இந்த வருட ஐபிஎல் போட்டிகள் மார்ச் 22ம் தேதி நாளை ஆரம்பித்து மே மாதம் 25ம் தேதி வரை இரண்டு மாதங்கள் நடைபெற உள்ளது.
பொதுவாக ஐபிஎல் போட்டிகள் வந்தாலே தியேட்டர்களுக்கு சிக்கல் வந்துவிடும். தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்கும் பெரும்பாலான இளைஞர்கள் ஐபிஎல் போட்டிகளை விரும்பிப் பார்ப்பவர்களாகவே இருப்பார்கள். ஒவ்வொரு வருடமும் இதனால் தியேட்டர்கள் நிறையவே பாதிக்கப்படுகிறது.
இந்த வருடமும் அப்படியே நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் விளையாடும் மொத்த அணிகளிலும் மாற்றங்கள் நடந்துள்ளது. அதனால் போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நாளை முதல் தியேட்டர்களில் இரவுக் காட்சிகளுக்கான கூட்டம் குறைய வாய்ப்புள்ளது.
இந்த வாரம் குறிப்பிடும்படியான படங்கள் எதுவும் இல்லை. அடுத்த வாரம் மார்ச் 27ம் தேதி 'வீர தீர சூரன் 2', ஏப்ரல் 10ம் தேதி 'குட் பேட் அக்லி, இட்லி கடை', மே 1ம் தேதி 'ரெட்ரோ' ஆகிய முக்கியமான படங்கள் வேண்டுமானால் ஐபிஎல் போட்டிகளிலிருந்து கொஞ்சம் தப்பிக்க வாய்ப்புள்ளது.
இந்த வருடம் கோடை வெயிலின் தாக்கமும் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாக பகல் நேரக் காட்சிகளுக்கும் பாதிப்புகள் வரலாம். ஏற்கெனவே சிங்கிள் தியேட்டர்கள் பலவற்றில் காட்சிகள் அடிக்கடி ரத்து செய்யப்படுகின்றன. இப்போது ஐபிஎல், வெயில் தாக்கம் வந்தால் நிலைமை மோசமாக வாய்ப்புள்ளது.