விலை உயர்ந்த காரை வாங்கிய ஊர்வசி ரவுட்டேலா | விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படத்தின் டீசர் வெளியானது | சம்பள பாகுபாடு : சமந்தா முன்னெடுத்த செயல் | டான்சர் என்ற முத்திரையை உடைக்க விரும்பும் ஸ்ரீலீலா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் ரவி மோகன் : ஹீரோ யார் தெரியுமா? | பராசக்தி படத்தில் இணைந்த குரு சோமசுந்தரம், பசில் ஜோசப் | ராஜமவுலி படப்பிடிப்பு: ஒடிசா துணை முதல்வர் மகிழ்ச்சி | 'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் சாம் சிஎஸ் | 33 வருட இடைவெளிக்குப் பிறகு இயக்குனராக கே ரங்கராஜ் | அடல்ட் கன்டன்ட் படமாக வெளிவரும் 'பெருசு' |
தமிழ் சினிமாவில் 20 வருடங்களாக 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னனி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். தற்போது 'கராத்தே பாபு' படத்தில் நடித்து வருகிறார். இது அல்லாமல் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகி வரும் 'பராசக்தி' படத்தில் வில்லன் ஆக ரவி மோகன் நடித்து வருகிறார். மேலும் அவர் நடித்துள்ள ஜீனி படமும் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த படங்களுக்கு பிறகு ரவி மோகன் அவரின் நீண்ட கால ஆசையான இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். இந்தாண்டிற்குள் இந்த படத்திற்கான படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார். இதை ரவியே தயாரித்து இயக்குகிறார். மேலும் இதில் கதாநாயகனாக யோகி பாபு நடிப்பது உறுதியாகியுள்ளது. இருவரும் இணைந்து கோமாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர். இந்தபடம் காமெடி உடன் கூடிய எமோஷனல் கதையில் உருவாகிறதாம்.