'அறம்' தயாரிப்பாளர் ராஜேஷ் நாயகனாக நடித்த 'அங்கீகாரம்' டிரைலர் வெளியீடு | டிக்கெட் உயர்வை அனுமதிக்க மாட்டோம்: தெலுங்கானா தியேட்டர் சங்கம் | என்னை யாரும் கண்டுகிடலை.. நொறுங்கிய என் ஈகோ: பெங்களூருவில் ரஜினிகாந்த் பேச்சு | 6 மொழிகளில் தயாராகும் சிலந்தி 2ம் பாகம் | தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி: சிவகார்த்திகேயன் எச்சரிக்கை | தமிழில் மீண்டும் ஒரு ஜோம்பி படம் | ரவி மோகன் விருது விழாவில் கெனீஷாவின் இசை நிகழ்ச்சி | பிளாஷ்பேக்: குஷ்புவை நிராகரித்த பார்த்திபன் | பிளாஷ்பேக்: தணிக்கை குழுவால் சிதைக்கப்படட 'நல்ல தீர்ப்பு' | 2026 - வசூல், லாபத்தில் முதலிடத்தில் 'தாய் கிழவி' |

மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த கும்பலாங்கி நைட்ஸ் படத்தின் மூலம் இளம் நடிகராக அறிமுகமானவர் மேத்யூ தாமஸ். அதன் பிறகு தொடர்ந்து முக்கிய பாத்திரங்களில் நடித்து வந்த மேத்யூ தாமஸ் இரண்டு வருடங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் விஜய்யின் மகனாக நடித்து தமிழிலும் பிரபலமானார்.
சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கிற படத்திலும் நகைச்சுவை நடிப்பில் பிரமாதப்படுத்தினார். இந்த நிலையில் மலையாளத்தில் இவரது நடிப்பில் லவ்லி என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. காரணம் இந்த படத்தில் நாயகி கதாபாத்திரத்தில் ஒரு ஈ நடித்துள்ளது.
இந்த டீசரில் மேத்யூ தாமஸ் அந்த ஈயுடன் பேசுவதை பார்க்கும்போது கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ராஜமவுலி இயக்கத்தில் சமந்தா, நானி நடித்த நான் ஈ படத்தை பார்ப்பது போலவே இருக்கிறது. அதில் நாயகன் ஈயாக வந்தார். இதில் நாயகி ஈயாக வருகிறார். அந்த படத்தின் உல்டாவாக தான் இந்த படம் உருவாகி இருப்பது போல தெரிகிறது.
திலீஷ் கருணாகரன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். 3டியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு பிரபல இயக்குனரான ஆஷிக் அபு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். குழந்தைகளை கவரும் படமாக இது உருவாகி இருப்பதால் வரும் ஏப்ரல் நான்காம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.




