பாரதத்தின் கலாசாரம் தெரியாத இளைஞர்கள்: ரஜினி வேதனை | ஆன்லைன் முன்பதிவு டிரெண்டிங்கில் முந்தும் 'ஹிட் 3' | ஏஐ தொழில்நுட்பத்தில் வ.உ.சி வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகும் 'நாவாய்' | 'டிடி நெக்ஸ்ட் லெவல்' டிரைலர் - கவுதம் மேனனையே கலாய்ச்சிட்டீங்களே… | பிஸியோதெரபி சிகிச்சையில் அஜித்குமார் | மே ரிலீஸ் பட்டியலில் ஒவ்வொன்றாய் சேரும் படங்கள் | 'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் |
பான் மசாலா விளம்பர படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கான், டைகர் ஷெராப் ஆகியோர் மீது ஜெய்ப்பூரை சேர்ந்த வக்கீல் யோகேந்திர சிங் பதியால் என்பவர் நுகர்வோர் குறை தீர்ப்பு கமிஷனில் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில், ''நடிகர்கள் ஷாருக்கான், அஜய்தேவ்கான், டைகர் ஷெராப் ஆகியோர் நடித்துள்ள பான் மசாலா விளம்பர படங்களில், பான் மசாலாவில் குங்குமப்பூ கலப்பதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. சந்தையில் ஒரு கிலோ குங்குமப்பூ ரூ.4 லட்சத்துக்கு விற்கப்படுகிறது. ஆனால் பான் மசாலா விலை வெறும் 5 ரூபாய் மட்டும்தான். அப்படி இருக்கும்போது பான் மசாலாவில் எப்படி குங்குமப்பூவை கலப்பார்கள்.
நடிகர்களின் பான் மசாலா விளம்பரத்தை உண்மை என்று நம்பி சாதாரண மக்கள் பான் மசாலாவை உட்கொள்கிறார்கள். இது ஆரோக்கியத்துக்கு கேடு செய்கிறது. புற்றுநோய் போன்ற கொடிய வியாதிகளையும் உருவாக்குகிறது. எனவே பான் மசாலா விளம்பரங்களில் நடித்துள்ள நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து ஷாருக்கான், அஜய் தேவ்கான், டைகர் ஷெராப் ஆகிய மூவரும் வருகிற 19ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நுகர்வோர் கமிஷன் தலைவர் கைர்சிலாஸ் மீனா, உறுப்பினர் ஹேமலதா அகர்வால் ஆகியோர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.