இன்னொரு இயக்குனரை நடிகராக களத்தில் இறக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் | சுவாசிகாவிற்கு லேசான காயம் | கனவு நிறைவேறிய நாள் - அஸ்வத் மகிழ்ச்சி | தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்ட விக்ரம் பிரபு பட நாயகி | அது பிரபுவிற்கு சொந்தமானது : சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய கோரி ராம்குமார் மனு | முதல் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மறக்காத சமந்தா | 20 நாட்கள் பிணமாக நடித்த ரூபா | ஆண்டனி வர்க்கீஸின் புதிய படம் அறிவிப்பு | மீண்டும் இணைந்த 'மெஹந்தி சர்க்கஸ்' கூட்டணி | பிளாஷ்பேக் : நீதிபதியில் 5 ஹீரோயின்கள் |
தமிழில் வைகை, கோரிப்பாளையம் போன்ற படங்களில் நடித்தவர் சுவாசிகா. சினிமாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட இவருக்கு கடந்தாண்டு வெளிவந்த ‛லப்பர் பந்து' படம் தான் புகழ் வெளிச்சம் தந்தது. இதுதவிர மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யாவின் 45வது படம் மற்றும் சூரியின் மாமன் ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார். இவற்றில் மாமன் படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்க, சூரி நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தின் சண்டைக்காட்சி படமானபோது இடது கையில் சுவாசிகாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயத்திற்கான சிகிச்சை எடுத்த பின் மீண்டும் படப்பிடிப்பில் தொடர்ந்து அவர் பங்கேற்றார்.