இன்னொரு இயக்குனரை நடிகராக களத்தில் இறக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் | சுவாசிகாவிற்கு லேசான காயம் | கனவு நிறைவேறிய நாள் - அஸ்வத் மகிழ்ச்சி | தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்ட விக்ரம் பிரபு பட நாயகி | அது பிரபுவிற்கு சொந்தமானது : சிவாஜி வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய கோரி ராம்குமார் மனு | முதல் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மறக்காத சமந்தா | 20 நாட்கள் பிணமாக நடித்த ரூபா | ஆண்டனி வர்க்கீஸின் புதிய படம் அறிவிப்பு | மீண்டும் இணைந்த 'மெஹந்தி சர்க்கஸ்' கூட்டணி | பிளாஷ்பேக் : நீதிபதியில் 5 ஹீரோயின்கள் |
இயக்குனர்களாக வெற்றி பெற்ற பலர் நடிகர்களாகவும் மாறி உள்ளார்கள். பாரதிராஜா, விசு, கேஎஸ் ரவிக்குமார், பாக்யராஜ், சுந்தர் சி, சேரன், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், சசிகுமார், சமுத்திரகனி... என இந்த பட்டியல் இன்னும் நீளும்... சமீபத்திய இயக்குனர்களில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் பிரதீப் ரங்கநாதனை சொல்லலாம். கோமாளி படத்தை இயக்கியவர் அடுத்து லவ் டுடே, டிராகன் என அடுத்தடுத்து ஹீரோவாகவும் நடித்து வெற்றி பெற்றுள்ளார். இவர் வரிசையில் அடுத்து நடிகராக களமிறங்க உள்ளார் இயக்குனர் இளன்.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடித்த ‛பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இளன். தொடர்ந்து கவின் நடித்த ஸ்டார் படத்தையும் இயக்கினார். அடுத்து இவர் ஒரு படத்தை இயக்கி, அதில் அவரே ஹீரோவாக நடிக்க முடிவெடுத்துள்ளாராம். இவர் சொன்ன கதை பிடித்து போக இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரதீப் போன்று இளனும் ஒரு ஸ்டார் நடிகராக மின்னுவார் என நம்புவோம்.