அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து திரைக்கு வந்த 'அமரன்' படம் 300 கோடிக்கு மேல் வசூலித்ததால் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படங்களின் பட்ஜெட் அதிகரித்து இருப்பதோடு, அவரை வைத்து முன்னணி நிறுவனங்களும் படம் தயாரிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஏ .ஆர் .முருகதாஸ் இயக்கத்தில் 'மதராஸி', சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி' படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இந்த நிலையில் அடுத்து விஜய் நடித்த 'தி கோட்' படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை உறுதிபடுத்தியுள்ள அர்ச்சனா கல்பாத்தி, இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் 'டிராகன்' என்ற படத்தை தற்போது தயாரித்துள்ளது ஏஜிஎஸ் நிறுவனம். இப்படம் பிப்ரவரி 21ம் தேதி திரைக்கு வருகிறது.