இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
நடிகை ஸ்ருதிஹாசன் ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் பிஸியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். சமீபகாலமாக திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
தற்போது அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம், நடிகர், நடிகைகள் அழகுக்காகவும், தோற்ற பொழிவிற்காகவும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்வது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. ஸ்ருதிஹாசன் அளித்த பதிலின் படி, "மக்கள் மற்றவர்களின் தோற்றத்தை வைத்து மதிப்பிடக்கூடாது. அறுவை சிகிச்சைகளின் மூலம் உடலில் மாற்றங்களைக் கொண்டு வருவது எந்தவொரு தவறும் கிடையாது. அதுவும் மற்றவர்களின் கட்டாயமின்றி செய்யும் வரைதான். ஆனால், ஒருவரின் உடலையோ, அழகையோ, தோற்றத்தை வைத்து விமர்சிப்பது தான் தவறு" எனக் கூறினார்.