'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான படம் தெறி. கடந்த 2016ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் 75 கோடி பட்ஜெட்டில் உருவாகி, 150 கோடி வசூலித்தது. அதோடு தெறி படம் முதல் நாளில் உலக அளவில் 39 கோடி ரூபாய் வசூலித்திருந்தது.
இந்த நிலையில் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான 'பேபி ஜான்' படம் கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி நேற்று வெளியாகியுள்ளது. வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தை காளீஸ் இயக்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முதல் நாளில் உலகம் முழுக்க இப்படம் 12.50 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்த படம் வசூல்ரீதியாக விஜய்யின் தெறி படத்தை விட பெரிய அளவில் பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.