மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான கிச்சா சுதீப் நடித்துள்ள படம் 'மேக்ஸ்'. கன்னடத்தில் திரைக்கு வந்துள்ள இப்படம் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் நாளை வெளிவருகிறது. இதன் தமிழ் பதிப்பு டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சுதீப், தயாரிப்பாளர் எஸ்.தாணு, தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் ஆர்.வி. உதயகுமார், இயக்குனர்கள் மிஷ்கின், ராஜ்குமார் பெரியசாமி, தேசிங்கு பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கிச்சா சுதீப் பேசும்போது “அறிமுக இயக்குனர் விஜய் கார்த்திகேயாவின் அற்புதமான கதையில் உருவான படம் இது. ஆக்ஷன் பிரியர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும். தமிழில் தாணு வெளியிடுகிறார். 'காக்க காக்க' படத்தின் கன்னட உரிமைகளை வாங்கும்போது ஒரு பைசாகூட அதற்காக பெற்றுக் கொள்ளவில்லை. அவர் போன்ற நல்ல தமிழ் தயாரிப்பாளர்கள் கன்னடத்திற்கு வரவேண்டும். இது எனது வேண்டுகோள்'' என்றார்.