பிளாஷ்பேக்: சமூக கதையாக மாற்றப்பட்ட இதிகாச கதை | மந்தாகினியாக பிரியங்கா சோப்ரா : முதல் பார்வை போஸ்டர் வெளியீடு | ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை |

மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட வெளிமாநில படங்கள் தமிழில் வெளியாவதும், வெற்றி பெறுவதும் வழக்கமான ஒன்று. அதேப்போல தமிழ் படங்கள் வெளி மாநிலங்களில் வெளியாகி வரவேற்பை பெற்றதும் உண்டு. தமிழ் படங்கள் அதிகபட்சம் வெளிமாநிலங்களில் 100 நாள் வரை ஓடி ஓடியிருக்கிறது. ஆனால் வெளி மாநிலத்தில் வெள்ளிவிழா கொண்டாடிய ஒரே படம் முந்தானை முடிச்சி.
முந்தானை முடிச்சு 1983ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியானது. தமிழ் நாட்டில் 55 தியேட்டர்களில் வெளியானது. இதில் 43 தியேட்டர்களில் 100 நாள் ஓடியது, 12 தியேட்டர்களில் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது. சென்னை மற்றும் மதுரை தியேட்டர்களில் வெள்ளி விழாவை தாண்டியும் ஓடியது.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தியேட்டரில் 100 நாட்களும், திருவனந்தபுரத்தில் வெளியான தியேட்டரில் வெள்ளி விழாவும் கொண்டாடியது. படத்தின் வெள்ளிவிழாவில் அப்போதைய முதல் எம்ஜிஆர் கலந்து கொண்டு படகுழுவினர்களுக்கு கேடயம் வழங்கி வாழ்த்தி பேசினார்.