பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன் இயக்குனர் விஜய். பிரியதர்ஷனிடம் உதவியாளராக இருந்து 'கிரீடம்' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அதன்பிறகு பொய் சொல்லப் போறோம், மதராசபட்டிணம், தெய்வதிருமகள், தாண்டவம், தலைவா, தேவி, தலைவி உள்ளிட்ட படங்களை இயக்கினார். கடைசியாக 'மிஷன் சேப்டர் 1' படத்தை இயக்கினார்.
இந்த நிலையில் விஜய் 'டி ஸ்டூடியோ போஸ்ட்' என்ற பெயரில் போஸ்ட் புரோக்ஷன் ஸ்டூடியோ திறந்துள்ளார். இங்கு படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகளை செய்யலாம். சென்னை சாலிகிராமத்தில் பிரசாத் அவன்யூவில் அமைந்துள்ள இந்த ஸ்டூடியோவை சிவகுமாரும், பிரியதர்ஷனும் திறந்து வைத்தனர். விழாவில் நடிகைகள் சாயிஷா, லட்சுமி ராமிருஷ்ணன், சரண்யா, மஞ்சிமா மோகன், நடிகர்கள் நட்டி நடராஜ், உதயா, தம்பி ராமய்யா, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.