ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் |

சினிமா தொடங்கிய காலத்தில் ராமாயணம், மகாபாரத கதைகளும், அதன் கிளைகதைகளும் படமாகி வந்த நேரத்தில் ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவரின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான படம் 'பக்த துளிதாஸ்'. 1937ல் வந்த படத்தை ராஜசந்திரசேகர் இயக்கினார். எம்.கே.ராதா துளசிதாசாக நடித்தார், கே.எஸ்.சபிதா தேவி அவரது மனைவியாக நடித்தார்.
புராண காலத்தில் வட மொழியில் ராமாயணத்தை இயற்றிய வால்மீகி, அக்பரின் ஆட்சி காலத்தில் அவரது அமைச்சரவையில் மத ஆலோசகராக இருந்த ஆத்மாராவுக்கு மகனாக பிறந்து, ஹிந்தியில் ராமாயணத்தை இயற்றியதாக இந்த படத்தின் கதை அமைந்திருந்தது.
1947ம் ஆண்டு வெளிவந்த 'பக்த துளிதாஸ்' படத்தை பி.எஸ்.ரங்கா இயக்கினார். பி.எஸ்.ராஜ அய்யங்கர் துளசிராமாக நடித்தார். அவர் மனைவியாக லட்சுமி சங்கர் நடித்தார். இந்த படத்தில் வால்மீகி அத்தினாபுரத்தில் வாழ்ந்த ராம பக்தரான ஆத்மாராவிற்கு மகனாக பிறந்து தமிழில் ராமாயணத்தை எழுதியதாக அமைக்கப்பட்டிருந்தது. இரண்டு படங்களுமே வரவேற்பை பெற்றது.