என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

கடந்த 2010ம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ஆண்ட்ரியா, ரீமா சென் ஆகியோர் இணைந்து நடித்து தமிழில் வெளிவந்த படம் 'ஆயிரத்தில் ஒருவன்'. இப்படம் 'யுகந்நிக்கி ஒக்கடு' எனும் பெயரில் தெலுங்கு பதிப்பில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் வெளியானது. இப்படம் வெளிவந்த காலகட்டத்தில் தமிழில் வெற்றி பெறவில்லை. ஆனால், தெலுங்கு பதிப்பில் யாரும் எதிர்பாராத விதமாக மாபெரும் படமாக அமைந்தது.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு ஆயிரத்தில் ஒருவன் தெலுங்கு பதிப்பில் வருகின்ற மார்ச் 14ம் தேதி அன்று இந்தியளவில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் மற்றும் அமெரிக்கா நாட்டிலும் ரீ ரிலீஸ் செய்வதக அறிவித்துள்ளனர்.