மலை போல மாமன் இருக்கேன் : சூரியின் ‛மாமன்' பட டிரைலர் வெளியானது | மதுரையில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு : பின்தொடராதீங்கனு சொல்லியும் கேட்காத ரசிகர்கள் | பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி, காஷ்மீரில் மோடி அமைதியை கொண்டு வருவார் : ரஜினி பேச்சு | அஜித்தின் 54வது பிறந்தநாள் : ஷாலினி வெளியிட்ட புகைப்படங்கள் | மனைவி , மகளுடன் கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன் | சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: மோடி பெருமிதம் | ஆக்ஷன் கலந்த துள்ளல் உடன் வெளிவந்துள்ள ‛ஆயா ரே பாபா' பாடல் | சசிகுமாரின் அடுத்தடுத்த பட இயக்குனர்கள் வரிசை | சிம்பு 49வது படத்தில் இணைந்த சந்தானம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஷாருக்கானின் கிங் பட வாய்ப்பை இழந்த நயன்தாரா |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கூலி'. இப்படத்தின் டீசர் ஹோலி தினமான மார்ச் 14ம் தேதி வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினம் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் மற்றும் சிவாஜி ராவ் கெய்க்வாடுக்கு ரஜினிகாந்த் என்ற பெயரை பாலசந்தர் சூட்டிய நாள் என்பதாலும் பொருத்தமான நாளாக இருக்கும் என்று முடிவெடுத்துள்ளார்களாம்.
'கூலி' படத்தின் அறிமுக முன்னோட்ட வீடியோவே ரஜினி ரசிகர்களை அதிகமாக ரசிக்க வைத்தது. அடுத்து டீசர் வெளியீடு என்றால் அந்த எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே இருக்கிறது. லோகேஷ், ரஜினி முதல் முறையாக இணைந்துள்ள படம் என்பது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
ரஜினி நடித்து கடைசியாக வெளிவந்த 'வேட்டையன்' படம் சரியான வரவேற்பையும், வசூலையும் பெறாமல் போனது. அதனால், 'கூலி' வெற்றியை அவர்கள் மிகவும் எதிர்பார்க்கிறார்கள். 'ஜெயிலர்' படம் 600 கோடி வசூலைக் குவித்தது. 'கூலி' படம் 1000 கோடி வசூலைக் கடந்து தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி என்று தடம் பதிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.