'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

இயக்குனர் லிங்குசாமி நடிகர் அஜித்குமார் கூட்டணியில் கடந்த 2005ம் ஆண்டில் வெளிவந்த படம் 'ஜி'. இப்படம் அந்த காலகட்டத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகி தோல்வி படமாக அமைந்தது. சமீபத்தில் லிங்குசாமி அளித்த பேட்டியில் அவரிடம் அஜித்துடன் பணியாற்றிய அனுபவம் குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு அவர் கூறியதாவது, "அஜித் மிகவும் பாசிடிவ் ஆன மனிதர். அவர் தோற்றம், குரல் என கவனித்து, நீங்கள் எம்.ஜி.ஆர் மாதிரின்னு சொல்வேன். பெரிய வார்த்தை சொல்றீங்கனு சொல்வார்.
தெலுங்கில் பவன் கல்யாணுக்கு தான் இப்படி உயிரை கொடுக்கிற அளவுக்கு ரசிகர்கள் உள்ளனர். இத்தனைக்கும் விக்ரம், சூர்யா மாதிரி சினிமாவுக்குள் விழுந்து கிடப்பதும் கிடையாது. ஆபிசர் மாதிரி தான் வருவார். ஆனால், வேலைன்னு வந்துட்டா அதிலேயே இருப்பார். கார் பந்தயத்துக்கு போனால் அங்கேயும் சின்சியர் ஆக இருப்பார்", இவ்வாறு தெரிவித்துள்ளார்.




