'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா |
வேட்டையன் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இப்படத்தில் அவருடன் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, பூஜா ஹெக்டே ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 80 சதவீத படப்பிடிப்புமுடிந்துவிட்ட நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படியான நிலையில் தற்போது இந்த கூலி படத்தின் டீசர் வருகிற மார்ச் 14ல் வெளியாக இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. அன்றைய தினம் லோகேஷின் பிறந்தநாள் என்பதால் டீசர் வெளியாக வாய்ப்புள்ளது. அல்லது படம் சம்பந்தப்பட்ட ஒரு முன்னோட்ட வீடியோ கூட வெளியிடப்படலாம் என்கிறார்கள். முதன்முதலாக ரஜினி - லோகேஷ் கனகராஜ் காம்போ என்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.