மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் கடந்தாண்டு திரைக்கு வந்த படம் அமரன். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை தழுவி இப்படம் உருவாகி இருந்தது. ரசிகர்களின் வரவேற்பை பெற்ற இப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.
இந்த நிலையில் தற்போது இந்த அமரன் படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதாவது இந்த ஆண்டில் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் உலக கலாச்சார திரைப்பட விருது விழாவில் திரையிட இப்படம் தேர்வாகி உள்ளது. உலக அளவில் தேர்வாகியுள்ள பத்து படங்களில் இந்த அமரனும் இடம் பிடித்துள்ளது.