'சூர்யா 45' படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புதிய தோற்றத்தில் கமல் : அடுத்த படத்திற்கு தயார் | நான்கு நாட்களில் ரூ.240 கோடி வசூல் செய்த வேட்டையன்! | அமரன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிம்பு! | முன்னாள் மனைவியின் புகார் எதிரொலி- நடிகர் பாலா திடீர் கைது!! | அந்தரங்க வீடியோ லீக்... அவமானத்தில் முடிந்த அதீத நட்பு : போலீஸில் ஓவியா புகார் | கங்குவா படத்திற்காக ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் தயாரிப்பாளர் | எந்த சூழலிலும் யாருக்கும் பயப்பட மாட்டேன் - அடா சர்மா | குபேரா பட ரிலீஸ் குறித்து புதிய தகவல் இதோ! | தனுஷின் 'இட்லி கடை'யில் இணைந்த நித்யா மேனன், அருண் விஜய் |
கடந்த 2010ம் ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் ' ஆயிரத்தில் ஒருவன்'. இப்படம் வெளிவந்த காலகட்டத்தில் ரசிகர்களை பெரிதளவில் கவரவில்லை .அதனால் தோல்வியடைந்தது.
அதன்பிறகு காலங்கள் கடந்த பிறகு ரசிகர்கள் மத்தியில் ஆயிரத்தில் ஒருவன் படம் பேசும் பொருளாக மாறியது. தற்போது ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் 'ஆயிரத்தில் ஒருவன்' படம் குறித்து நீண்ட வீடியோ பதிவொன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் செல்வராகவன். அதன்படி, “ஆயிரத்தில் ஒருவன் கொடுத்த ரணங்கள், வலிகள், காயங்கள் என மனம் முழுக்க காலமெல்லாம் வலித்துக் கொண்டே தான் இருக்கும். அந்தப் படம் தொடங்கப்பட்ட போது புதிய அனுபவத்தை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருமே உயிரைக் கொடுத்து உழைத்தார்கள். அந்தளவுக்கு நல்ல படக்குழு அமைந்தது என அதற்கு ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஒவ்வொரு நாளும் பாம்புகள், தேள்கள், அட்டைகள் உடன் சிரமப்பட்டு படப்பிடிப்பு நடத்துவோம்.
'ஆயிரத்தில் ஒருவன்' பாதிப் படம் முடியும் தருவாயில், சொன்ன பொருட்செலவில் எடுக்க முடியாது என புரிந்தது. உடனே தயாரிப்பாளரிடம் சொன்ன பட்ஜெட்டை விட எங்கேயோ போகுது. படத்தை நானே தயாரித்துக் கொள்கிறேன். நீங்கள் கொடுத்த பணத்தை வட்டியுடன் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என கூறினேன். தயாரிப்பளர் ரவீந்திரன் நல்ல மனிதர் . இந்த மாதிரி நல்ல படத்தை நான் தான் தயாரிப்பேன் என்று சொன்னார். இன்னும் 5 கோடி கொடுக்கிறேன் என்றார். ஆனால், அதையும் தாண்டி பொருட்செலவு அதிகமானது மீதமுள்ள படத்தை நானே வட்டிக்கு வாங்கி முடித்தேன்.
இறுதிகட்டப் பணிகளில் மிகவும் சிரமப்பட்டோம் . எத்தனையோ இரவுகள் தூங்காமல் உழைத்து இப்படமும் வெளியானது. அன்றிலிருந்து ஒவ்வொருவரும் குத்திக் கிழிக்கிறார்கள். ரத்தம் ரத்தமாக துண்டுப் போடுகிறார்கள். இவன் யார் இப்படி எடுப்பதற்கு என்று போஸ்டர் ஒட்டுகிறார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எதனால் இது நடக்கிறது என தெரியவில்லை நாட்கள் ஆக ஆக எதிர்ப்பு சேர்ந்துக் கொண்டே போனது.
தெலுங்கில் வெளியாகி இப்படம் பெரும் வரவேற்பு பெற்றது. அங்கு படத்தை பெரிதாக விளம்பரப்படுத்தினோம். இந்த படத்திற்காக உழைத்த கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன், ஒளிப்பதிவாளர் ராம்ஜி, இசையமைத்த ஜி.வி என இவர்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கம் இருந்தது. ஜி.வி.பிரகாஷ் எல்லாம் பல இரவுகள் தூங்காமல் இப்படத்துடன் வாழ்ந்தார். இப்போது வரை அங்கீகாரம் கிடைக்காதற்கு நான் அழுதுக் கொண்டே இருக்கிறேன்.
இந்தப் படத்துக்காக கடுமையாக ஆராய்ச்சி செய்து சோழ அரசர்களை காண்பித்தோம். அனைத்துமே கல்வெட்டுகளில் இருந்த உண்மை இன்று அனைவருமே சோழர்களை பிடித்துக் கொண்டார்கள், சோழர்களின் பயணம் தொடரும் என்கிறார்கள். அந்த சோழனை பற்றி முன்பு ஏன் யாருமே பேசவில்லை என்பது சிரிப்பாக தான் இருக்கிறது.
கார்த்தி மட்டும் சரியாக சொன்னார். “சார். உணர்ச்சிகரமான க்ளைமாக்ஸ். அது சரியாக வருமா என சாரிடம் கேளுங்கள்” என்று ராம்ஜியிடம் கேட்டிருக்கிறார் கார்த்தி. அது சரியாக இருக்கும் என்று படமாக்கிவிட்டோம். தமிழர்களுக்கு நடந்த கொடுமை யாருமே திரையில் காண விரும்பவில்லை என்பது இப்போது நன்றாக புரிகிறது.
சோழர்கள், அரசர்கள் என இப்போது படம் எடுப்பவர்கள் எங்களுக்கு ஒரு நன்றி கார்டு போடுங்கள். ஏனென்றால் அதற்கு முன்பு அந்த முள் பாதையில் உருண்டவர்கள் யாருமே இல்லை. அது ஒன்று தான் என் தாழ்மையான வேண்டுகோள்” என செல்வராகவன் இவ்வாறு பேசியிருக்கிறார்.
இப்போது சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.