ரஜினிகாந்தின் 'வேட்டையன்' முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? | வெற்றிமாறனின் விடுதலை-2 படத்தின் டப்பிங் தொடங்கியது | சமந்தா நடித்துள்ள சிட்டாடல் வெப் தொடர்- நவம்பரில் வெளியாகிறது!! | வேட்டையன் படம் பார்க்கச் சென்ற வீடியோவை வெளியிட்ட துஷாரா விஜயன்! | சர்ச்சை எதிரொலி! ஆயுத பூஜைக்கு வாழ்த்து சொன்ன விஜய்! | ஜிஎஸ்டி வரி நோட்டீஸ்: ஹாரிஸ் ஜெயராஜ் வழக்கு தள்ளுபடி | ஹனுமான் இயக்குனர் தயாரிப்பில் 'சூப்பர் உமன்' படமாக உருவாகும் மகாகாளி | வேட்டையன் டைட்டில் அதிருப்தி ; ரசிகர்களிடம் ராணா சமாளிப்பு | 6வது வாரத்தில் 'தி கோட்', 4வது வாரத்தில் 'லப்பர் பந்து' | கிராமி விருது தேர்வில் ஆடுஜீவிதம் வெளியேறியது ஏன் ? ஏ.ஆர் ரஹ்மான் விளக்கம் |
சென்னை: ''திரைத்துறையில் 80 காலகட்டத்தில் நடிகைகளுக்கு பல துன்புறுத்தல்கள் இருந்தது; இப்போது பல பெண்கள் தைரியசாலிகளாக இருக்கின்றனர். முன்பு நடந்ததுபோல் தற்போது பாலியல் அத்துமீறல் இல்லை'' என நடிகை ராதிகா கூறியுள்ளார்.
கேரளாவில் கேரவன்களில் ரகசிய கேமரா வைத்ததாக நடிகை ராதிகா பேசியிருந்த நிலையில், அவரிடம் கேரளா சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் தொலைபேசி வாயிலாக விசாரணை நடத்தி உள்ளனர். இது தொடர்பாக ராதிகா செய்தியாளர்களிடம் அளித்த விளக்கம்: கேரவன் விவகாரம் குறித்து விளக்கம்தான் கூறினேன்; புகார் அளிக்கவில்லை. எல்லா துறைகளிலும் பிரச்னை உள்ளது. திரைப்படத்துறையில் முன்பு நடந்ததுபோல் தற்போது பாலியல் அத்துமீறல் இல்லை.
குரல் கொடுங்கள்
80 காலகட்டத்தில் நடிகைகளுக்கு பல துன்புறுத்தல்கள் இருந்தது; இப்போது பல பெண்கள் தைரியசாலிகளாக இருக்கின்றனர். தற்காலத்தில் பெரும்பாலான இளைஞர்களின் மனநிலை தவறாக உள்ளது. இதுபோன்ற சமயத்தில் பெரிய நடிகரால் பிரச்னை வந்தபோது நடிகை ஒருவரை காப்பாற்றினேன். இதற்காக இன்று வரை அவர் என்னுடன் நட்பில் இருக்கிறார். தவறு செய்தவர்களை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன்; தவறு செய்தால் தட்டிக் கேட்பேன்; அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.
மவுனம் கலையுங்கள்
ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு கதை உள்ளது. உங்களின் மவுனம் தப்பாக தான் இருக்கும். பாலியல் அத்துமீறல் தொடர்பான தவறுகளை செய்யும் ஆண்களை சமூகத்தில் உயர்த்தி பார்க்கின்றனர். சர்வதேச அளவில் பெண்கள் பல சாதனைகளை செய்யும்நிலையில் நாம் இன்னும் இதை பற்றி பேச வேண்டியுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவர் நாசர் என்னிடம் பேசினார். நடிகைகளுக்கு நிகழும் பிரச்னைகள் குறித்து தீர்வு காண கோரினேன். நடிகர் சங்கத்தினர் கூட்டம் கூட்டினாலே சம்பள உயர்வு பற்றிதான் பேசுகின்றனர்; இந்த விவகாரம் குறித்து பேசி முடிவெடுக்க வேண்டும்.
அரசியலுக்கு வரும் நடிகர்கள்
முன்னணி நடிகர்கள், நடிகைகளின் மவுனம் தவறாக போய்விடும். ஆதரவு குரல் கொடுத்தால் உறுதுணையாக இருக்கும். நடிகர், நடிகைகளின் விஷயங்கள் குறித்து அவதூறாக பேசும் யூடியூபர்களை எந்தவொரு சினிமா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் தடை செய்ய வேண்டும். நடிகைகளுக்காக போராடாத நடிகர்கள்தான் அரசியலுக்கு சென்று மக்களுக்காக போராடப் போவதாக சொல்கிறார்கள். தங்களுடன் நடிக்கும் நடிகைகளுக்காக போராடாத நடிகர்கள் மக்களுக்காக போராடுவார்களா? நடிகைகளுக்கான பாலியல் தொல்லை குறித்த நடிகர்களின் மவுனம் மக்களால் தவறாக புரிந்து கொள்ளப்படும். நடிகைகளின் பிரச்னைக்கு நடிகர்கள் தான் முன்நின்று போராட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.