வெற்றிமாறன் தயாரித்த ‛பேட் கேர்ள்' படத்தின் டீசரை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு | 43வது பிறந்தநாளில் பிரியங்கா சோப்ரா வெளியிட்ட பிகினி புகைப்படம்! | ‛இளைய தளபதி' பட்டத்துக்கு சொந்தக்காரன் நான்தான்! நடிகர் சரவணன் பரபரப்பு தகவல் | வீட்டுக்குள் புகுந்த பாம்பை தானே பிடித்த நடிகர் சோனு சூட்! | தனுஷ் பிறந்த நாளில் தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகும் ‛மயக்கம் என்ன' | பேண்டஸி காதல் ஜானரில் உருவாகும் கவின் 9வது படம்! | ‛கில்லர்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | மீண்டும் ஹீரோவாக ஆக்சன் கிங் அர்ஜுன்! | ‛மதராஸி' படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக திட்டமிடும் படக்குழு! | கமல் படத்தில் நடிக்கும் வாய்ப்பினை தவறவிட்ட நாயகிகள்! |
தமிழ் சினிமாவில் 24 சங்கங்கள் தற்போது செயல்பட்டு வருகிறது. இவை அனைத்தும் பெப்சி அமைப்பின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விசுவல் எபெக்ட்ஸ் தொழில்நுட்ப கலைஞர்கள் என இன்று புதிய சங்கத்தை தொடங்கியுள்ளனர். இந்த சங்கம் 'திவா' என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. அதாவது இன்டர்மீடியட் விஷுவல் எபெக்ட்ஸ் அசோசியேசன்.
இந்த அமைப்பு விரைவில் பெப்சியுடன் இணைக்கப்பட இருக்கிறது. இதற்கான நிகழ்வில் பெப்சி தலைவர் செல்வமணி பேசியதாவது : முன்பு நான் படம் செய்யும் பொழுது நினைத்ததை முன்கூட்டியே பார்ப்பதற்காக நிறைய உடல் உழைப்பும் பண உழைப்பும் தேவைப்பட்டது. அதிலும் 40% தான் எட்ட முடியும். ஆனால், இன்று அது தொழில்நுட்பத்தின் உதவியால் 100% மாறி இருக்கிறது.
பாரதிராஜா, பாலச்சந்தர், ஸ்ரீதர் போன்ற இயக்குநர்களின் காலகட்டத்தில் தான் சினிமா தொழில்நுட்ப கலைஞர்களின் கட்டுப்பாட்டிற்கு வந்தது. பின்பு ரஜினி, கமல் என நடிகர்களின் கட்டுப்பாட்டிற்கு சினிமா வந்தது. இப்போது 2025ல் இருந்து 2050 வரையிலான காலக்கட்டத்தில் சினிமாவை ஆளப்போவது விஎப்எக்ஸ், ஏஐ மற்றும் சிஜி தொழில்நுட்பம் தான். அவர்களுக்காக ஒரு சங்கம் என்பது பெரிய விஷயம்.
உங்கள் திறமையை எல்லோருக்கும் கொடுங்கள். அப்பொழுது தான் நீங்களும் சினிமாவும் வளர முடியும். மூன்று வருடம் உங்கள் யூனியனை சரியாக நடத்தினால் பெப்சியில் இணைய வாய்ப்பு தருகிறோம் என்று சொல்லி இருந்தேன். இப்பொழுது இரண்டாவது வருடத்தில் இருக்கிறார்கள். நிச்சயம் பெப்சியில் இணைவதற்கான முன்னெடுப்பை எடுப்போம்.
அதேபோல மத்திய, மாநில அரசிடமும் பேசி உங்களை அங்கீகரிப்பதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுப்போம். தயாரிப்பாளர்களுக்கு அதிகம் செலவு வைக்காமல் அவர்களுடன் இணைந்து இணக்கமாக பணிபுரிவதையும் நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நேர்மையும் வாய்மையும் எப்போதும் வெல்லும். என்றார்.